சனி, 1 ஆகஸ்ட், 2015

காவிரி வடகரை தலங்கள் 

இருபத்தெட்டாவது தலம் 

திருக்குரக்குக்கா என்கிற திருக்குரக்காவல் 

மூலவர் - குந்தளேஸ்வரர் 






அம்பாள் - குந்தளாம்பிகை 

















தலமரம் - வில்வ மரம்

தீர்த்தம் - கணபதி நதி 


புராண பெயர் - திருக்குரக்காவல்
தற்போதைய பெயர் - திருக்குரக்கா
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர் 

*
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 28வது தலம்.

*
ராமலிங்கத்தை பெயர்த்தெடுக்க முயற்சித்ததால் உண்டான பாவமும், சாபமும் தீர அனுமன் வழிபட்டு அருள் பெற்ற தலம் 

*
அப்பரின் மூலத்திருமேனி தனியழகுடன் 
*
மூலவர் கிழக்கு நோக்கியும் , அம்பாள் தெற்கு நோக்கியும் திருக்காட்சி 
*
ஆஞ்சநேயர் சன்னதி, சிவன் சன்னதி எதிரே அமைக்கப்பட்டுள்ளது. இவரே இத்தலத்தில் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது.








*
இக் கோயிலில் தட்சிணாமூர்த்தி சற்று வலதுபுறமாக திரும்பியுள்ளார்








*
பஞ்ச காக்கள் எனப்படும் தலங்களில் ஒன்று 

*
கொடிமரம் இல்லை 
*
அமாவாசை நாளில் அம்மைக்கு ஓமம் நடைபெறும் தலம் 
*
சிவராத்திரி, திருக்கார்த்திகை, அனுமன் ஜெயந்தி முதலான திருவிழாக்கள் 
*
சிவனார் மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறார். 













*
சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது அதிசயமாக சொல்லப்படுகிறது ( இது தற்போது நடைபெறுகிறதா எனத் தெரியவில்லை. கோயில் குருக்கள்களிடம் விசாரித்து தெரிந்து கொள்ளலாம் )
*
பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகன்,

கோஷ்டத்தில் வனதுர்க்கை,

கிராம தேவதையான செல்லியம்மன் 


ஆகியோர் உள்ளனர். 
*
இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில், புகழ் பெற்ற நவக்கிரக தலமான (செவ்வாய் தலம்) வைத்தீஸ்வரன் கோயில் இருக்கிறது.
*
சிவ அபச்சாரம் செய்ததால் மன்னிப்பு வேண்டிய அனுமன் இத்தலத்தில் சிவபூஜை செய்ததாகவும் ,. அப்போது சிவனுக்கு மலருடன், தான் காதில் அணிந்திருந்த குண்டலத்தையும் படைத்து வணங்கி மனஅமைதி பெற்றதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது. ஆஞ்சநேயரால் குண்டலம் வைத்து வழிபடப்பட்டவர் என்பதால், இத்தல சிவனார் 'குண்டலகேஸ்வரர்' என்றும் அழைக்கபடுகிறார் 

குருக்கள் வீடு அருகிலேயே உள்ளது . தொடர்பு கொண்டு சென்றால் ஆலயத்தை மற்ற நேரங்களிலும் தரிசிக்கலாம் 

மேலும் தொடர்புக்கு 

www.facebook.com/nataraj.sivam.33

தரிசன நேரம் 

காலை 06:00 - 12:00 &
மாலை 04:00 - 08:00

தொடர்புக்கு 

04364-258785

வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் இளந்தோப்பு ஊரையடைந்து ஊரின் தொடக்கத்திலேயே உள்ள மருத்துவமனைக்கு பக்கத்தில் செல்லும் சாலையில் 3 கிமீ பயணித்தால் இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து 13 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக