சனி, 11 ஜூலை, 2015

காவிரி வடகரை தலங்கள் 

பதினேழாம் தலம் 

கண்ணார் கோயில் தற்போது குறுமாணக்குடி 

மூலவர் - கண்ணாயிரம் உடையார் 




அம்பாள் - முருகுவளர் கோதை 






தலமரம் - சரக்கொன்றை 


தீர்த்தம் - இந்திர தீர்த்தம் 




புராண பெயர் - கண்ணார்கோவில்குறுமாணக்குடி
தற்போதைய பெயர் - குறுமாணக்குடி
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர்

* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 17வது தலம். 
* திருமால் அவதாரமான வாமனமூர்த்தி ( குறுமாணி ) வழிபட்டதால் இத்தலம் "குறுமாணக்குடி' எனப்படுகிறது.
* இக்கோயில் சோழர்களால் திருப்பணி செய்யப்பட்டது.



* சித்தி விநாயகர் சந்நிதி தனிக்கோயிலாக 
* அம்பாள் தெற்கு நோக்கி திருக்காட்சி 
* மூலவர் கிழக்கு நோக்கி மேனி முழுவதும் கண் போன்ற பள்ளங்களுடன் திருக்காட்சி 
* அம்பாள் சந்நிதி வெளிமண்டப மேற்புறத்தில் 12 ராசி கட்டங்கள். 12 ராசிக்காரர்களும் தங்கள் ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டிருந்தால், அம்பாள் முருகுவளர்க் கோதை நாயகிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம். 

* கவுதமரால் இந்திரனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் 
* சந்திரசேகரர் மூர்த்தம் 
* தீர்த்தக்கரையில் விநாயகர் , முருகர் சந்நிதிகள்
* கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி புறப்பாடு விசேஷம் 
* துர்க்கையம்மன் விசேஷம் 


* சுவாமி , அம்பாளுக்கு தீபாராதனை முடிந்த பிறகே ஒரு சேர விபூதி , குங்குமம் வழங்கப்படுவது இவ்வாலய மரபு 
* வாமனரான குறுமாணி வழிபட்ட தலம் 
* திருமணத்தடை நீக்கும் தலம் 



* கார்த்திகை சோமவாரத்தில் பிரம்மோற்சவ திருவிழா. 
* சிவனாருக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடைபெறும் தலம்.
* குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் , கண் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் இங்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் சிறந்த பலன் உண்டு என்பது நம்பிக்கை.
* இந்திரன் தனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட, அவனது ஆயிரம் குறிகளையும் ஆயிரம் கண்களாக மாற்றி, சிவனார் ஏற்றுக்கொண்டதால் இத்தல இறைவன் "கண்ணாயிரமுடையார்' ஆனார். 

அன்பர்கள் அவசியம் இவ்வாலத்தை தரிசிக்க வேண்டுமாய் விண்ணப்பிக்கிறேன். ஏனெனில் இவ்வாலயத்திற்கு பக்தர்கள் குறைந்த அளவிலேயே வருவதாகவும் நித்ய பூஜைகளுக்கே தடுமாற்றம் இருப்பதாகவும் கேள்வி . 

தரிசன நேரம்

காலை 06:00 - 12:00 &
மாலை 03:00 - 08:00

தொடர்புக்கு 

94422 - 58085 ,
92457 - 36552

வைத்தீஸ்வரன் கோயில் - மயிலாடுதுறை சாலையில் பாகசாலை செல்லும் வழித்தடத்தில் 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பக்தர்களின் ஆதரவை எதிர்நோக்கியுள்ள இச்சிவத்தலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக